Search This Blog

Tuesday, April 14, 2026

சிறந்த இசை


வீசும் காற்று விழும் துளிகளை

வீழ்த்தி விலகி சென்றது

ஒருவன் இறைவனின் முன்

நின்றான் சிறிய கேள்வியுடன்


சிறந்த இசையின் கேள்விக்கு

தாயின் தாலாட்டும் குயிலின்

குரலும் மழையின் சாரல்

ஓசையும் பதிலாகக் கிடைத்தது.


பள்ளி நேரம் முடியும்போது

ஒலிக்கும் மணியை பதிலாக

எதிர்பார்த்த அவனோ

இறைவனிடம் நின்றான்.


மழையின் துளிகள் நின்றன

புயல் தென்றலாய் மாறியது 

முதல் முறையாக அமைதியை

இசை எனக் கேட்டு மகிழ்ந்தான்.


 - அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


No comments:

Post a Comment